32 சுங்கச்சாவடிகள் நீக்கப்படுகிறதா? சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

c076cc6363cf5eae76656af12aaab57f

தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழகத்தில் சமீபத்தில் 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்கவேண்டும் என்றும் ஆனால் தற்போது நாற்பத்தி எட்டு சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் இதனை அடுத்து தேவையில்லாமல் இருக்கும் 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அமைச்சர் வேலு அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் இதுகுறித்து டெல்லி சென்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து தமிழகத்தில் உள்ள அதிகப்படியாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment