விழுப்புரம் பரபரப்பு!! சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!!

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூரில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்து மாத்திரைகள் கொடுப்பது வழக்கமாகும். அந்த வகையில்
விக்கிரவாண்டி அடுத்த வெங்கமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

அப்போது 31 மாணவ, மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்கள் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.