
தமிழகம்
கொட்டித்தீர்த்த கனமழை: சென்னையில் 31 விமான சேவை பாதிப்பு!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் விடாமல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் பல்வேறு இடங்களில் கன மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த சூழலில் இதன் எதிரொலியாக சென்னையில் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜெர்மனி, தேகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் அந்த விமானங்கள் ஐதராபாத் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
