Connect with us

தமிழகத்தில் இன்று 31 வது கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்!!!

மெகா தடுப்பூசி முகாம்

செய்திகள்

தமிழகத்தில் இன்று 31 வது கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்!!!

சில மாதங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதன் பின்பு கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து மெகா தடுப்புச் முகாம்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவருக்கு முக்கியத்துவம் தந்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாத 1.45 கோடி பேர் உள்ள நிலையில் முகாம் நடக்கிறது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top