Connect with us

குஜராத்தில் ரூபாய் 3050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்-அடிக்கல் நாட்டிய மோடி

modiiii

செய்திகள்

குஜராத்தில் ரூபாய் 3050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்-அடிக்கல் நாட்டிய மோடி

இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் ரூபாய் 3050 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் ரூபாய் 3050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார்.

கடந்த 20 ஆண்டுகளாக விரைவான வளர்ச்சி அடைந்து வருவது குஜராத்தின் பெருமை என பிரதமர் மோடி குறிப்பிட்டார். நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் பழங்குடியினர் வளர்ச்சிக்காக ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

தடுப்பூசி குறித்த பிரச்சாரங்கள் நகர்ப்புறங்களை சென்றடையும் அதேநேரத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு செல்வதாக பேசினார். குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சிக்லி என்னுமிடத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அவருக்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாகக் கொண்டது பாஜக அரசு என்றும் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து வருகிறது அரசு என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஏழைக்கும் தூய்மையான நீரைப் பெறும் உரிமை உள்ளது அதை நனவாக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்துகிறது அரசு என்றும் கூறினார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதே மக்களுக்கு தொண்டாற்ற கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top