கடந்த ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் தேர்தலில் வெற்றிபெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்திருந்தது.
அந்த வகையில் தற்போது முதலமைச்சராக பகவந்த் மான் உள்ள நிலையில் இத்திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி விரைவில் இத்திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவருவதாக அவர் கூறினார்.
இதனிடையே கடந்த செவ்வாய் கிழமை முதலமைச்சர் பகவந்த் மான் டெல்லிக்கு சென்று கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் முதலமைச்சர் பகவந்த் மான் இன்று முக்கிய அறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும், இத்திட்டம் வருகின்ற ஜூலை 1ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது பஞ்சாப் மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.