இன்று ஒரேநாளில் பெங்களூருவில் 300-ஐ நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்படுத்தப்படும் பாதிப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நோய் சூழல் மத்தியில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தோன்றி இன்று உலகமெங்கும் அதிதீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் அதிக வேகத்துடன் பரவிக்கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் ஒமைக்ரான் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மிகப் பெரிய மெட்ரோ சிட்டி ஒன்றில் 287 பேருக்கு ஒமைக்ரான் மதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை  தகவல் அளித்துள்ளது.

அதன்படி இன்று ஒரே நாளில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் புதிதாக 287 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பெங்களூரில் 287 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது அடுத்து கர்நாடக மாநிலத்தின் ஒமைக்ரான்  பாதிப்பு எண்ணிக்கை 766 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒமைக்ரான்  பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் ஒமைக்ரான்  பாதிப்பு அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment