திருச்செந்தூர் முருகனுக்கு 300 கோடியில் மெகா திட்டப்பணிகள், அடித்து விளையாடும் ஸ்டாலின்

இறை அன்பர்களுக்கும் இறை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் உத்தரவு ஈட்டதுக்கு ஏற்ப 15 மாதங்களில் 15 க்கும் மேற்பட்ட ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளோம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

அறநிலையத்துறையின் அதிகாரிகள் ஒன்றினைந்து பல்வேறு புதிய திட்டங்களை வடிவ அமைத்து வருகிறார்கள் இந்து சமய அறநிலையத்துறை உருவான 1951 ஆண்டில் இருந்து எந்த ஆட்சியிலும்  செய்ய வேண்டும் என்று நினைக்க தூண்டும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் உருவாக்கி வருகிறார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராமேஸ்வரம் திருக்கோயில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பெரிய பாளையத்து அம்மன் திருக்கோயில் திருத்தணி முருகன் திருக்கோயில் பழனி முருகன் திருக்கோயில் இவைகள் எல்லாம் பெரும் திட்டப் பணிகளை ஏற்படுத்தி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்

முன்பெல்லாம் வடமாநிலங்களில் 100 கோடி 150 கோடியிலே திருப்பணிகள் என்று கேள்வி படுவோம் . ஆனால் முதன் முதலில் தமிழக வரலாற்றில் XEL நிறுவனம் சார்பில் ரூபாய் 300 கோடி மதிப்பில் மேகா திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளது

வருகின்ற 28 ம் தேதி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தொடங்கப்பட உள்ள மேகா திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மாவட்ட ஆட்சியர் அறங்காவலர் தலைவர் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டு பணிகளை கவனிக்க வேண்டும்

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து குடமுழுக்கு விழாவையும் சேர்த்தே நடத்த திட்டம் ஈட்டுள்ளோம் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது.சிறு சிறு கஷ்டங்கள் இருந்தாலும் கூட பக்தர்கள் பிறகு வரும் மகிழ்ச்சியால் அதை பொருத்துக் கொள்ளுவார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment