30 வருடம் அவ்ளோ ஈஸி இல்லை….. சும்மா அதிருதில்ல!!!

bae36625192319f2cf01a9b07843664a

சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி ரசிகர்களை கவர்ந்து, தாத்தா என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் போட்டியிலும் இவரது அதிரடியான அனுகுமுறை கவனிக்க வைத்தது. 

இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று 30-வது திருமண நாளை கொண்டாடும் அவர், தனது மனைவியுடன் கல்யாணத்தில் எடுத்து கொண்ட வின்டேஜ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

மேலும், ”என்னுடன் 30 வருடம் வாழ்ந்தது சாதாரண விஷயம் கிடையாது. நீ அதை செய்து காட்டியிருக்கிறாய். நன்றி சிக்கு. 30-வது திருமண நாள் வாழ்த்துக்கள். Love You” என அவர் பதிவிட்டுள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.