ஓடும் பைக் டாக்ஸியில் இருந்து திடீரென குதித்த இளம்பெண்.. அதிர்ச்சி தகவல்..!

ஓடும் பைக் டாக்ஸியில் இருந்து 30 வயது பெண் ஒருவர் திடீரென குதித்து காயம் அடைந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் பெண் கட்டிடக்கலைஞர் ஒருவர் இரவு 11 மணிக்கு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பைக் டாக்ஸி முன்பதிவு செய்தார். அவர் தனியார் நிறுவன பைக் டாக்ஸியை தனது வீடு உள்ள இந்திரா நகருக்கு முன்பதிவு செய்த நிலையில் இரவு 11 மணி அளவில் அவர் முன்பதிவு செய்த பைக் வந்தது.

ஓடிபி சரிபார்க்கும் சாக்கில் அந்த பெண்ணின் மொபைல் போனை வாங்கிய பைக் ஓட்டுனர் அவளை உட்கார சொல்லிவிட்டு திடீரென பைக்கை எடுத்தார். சில நிமிடங்கள் கழித்து அவர் சென்ற பைக் இந்திரா நகர் நோக்கி செல்லாமல் வேறொரு பகுதிக்கு சென்றதை அறிந்ததும் அந்த பெண் தவறான பாதையில் செல்வது குறித்து ஓட்டுனரிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால் அந்த பெண்ணின் கேள்வியை பொருட்படுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த பெண் டிரைவரிடம் இருந்து தனது தொலைபேசியை பறித்த போது அதான் அந்த டிரைவர் குடிபோதையில் இருப்பதை உணர்ந்தார். இதனை அடுத்து தான் ஆபத்தான இடத்திற்கு செல்கிறோம் என்று புரிந்து கொண்ட அந்த பெண் தனது நண்பர்களுக்கு மொபைல் மூலம் தகவல் கொடுத்தார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் திடீரென அந்த பெண் பைக்கில் இருந்து கீழே குதித்தார். அதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பைக் ஓட்டுனர் பைக்கை நிறுத்தாமல் சென்று விட்டதும் அவரது முகம் தெளிவாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணை அந்த பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி அவரது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து உடனடியாக வரவழைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்த நிலையில் பைக் ஓட்டுநர் யார் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவர் போதையில் தான் வழிமாறி சென்றதாக விசாரணையில் கூறியதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.