15 மாதங்களில் 30 கோடி கொள்ளை.. அமைச்சர் மூர்த்தியை சாடிய இபிஎஸ்!!

மதுரையில் ஒரு அமைச்சர் 15 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தில் 30 கோடியில் ஆடம்பரமாக திருமணம் நடத்தியுள்ளதாக அமைச்சர் மூர்த்தியை இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பிளவு பட்டத்தற்கு திமுக தான் காரணம் என குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கமிசன், கலெக்சன் தான் திராவிட மாடல் என கூறினார்.

அதோடு மதுரையில் ஒரு அமைச்சர் ஆடம்பர திருமணத்தை நடத்தியுள்ளதாகவும், குறிப்பாக 15 மாதங்களில் கொள்ளையடித்த 30 கோடியில் நடத்தியதாக திமுக அமைச்சர் மூர்த்தியை சாடியுள்ளார்.

மேலும், மீண்டும் தமிழகத்தில் அதிமுக வரும்போது அனைத்து ஊழல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் என கூறியிருப்பது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment