3 டீச்சர் சீட்! 2 டாக்டர் சீட்!! ஏமாற்றிய பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி கைது!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமைதான் தற்போது தமிழகம் எங்கும் பரவி காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட தமிழகத்தில் இலவச சான்றிதழ் பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது என்று வேதனை அளித்தனர்.

பரிதி இளம்வழுதி

தற்போது இதுபோன்ற சம்பவத்தால் 1.03 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் பரிதி இளம்வழுதி மூன்றாவது மனைவி. அதன்படி ஆசிரியர் வேலை, எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ரூபாய் 1.03 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

கடலூர் ராதாகிருஷ்ணனின் 3 மகன்களுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 13 லட்சம் பெற்றுள்ளார் எலிசபெத். இரண்டு பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கேட்டு ரூபாய் 90 லட்சம் கொடுத்துள்ளார் கடலூர் ராதாகிருஷ்ணன்.

உறுதி அளித்தபடி வேலை வாங்கி தராததால் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட பரிதி இளம்வழுதி மூன்றாவது மனைவியான எலிசபெத் உள்பட 2 பேரில் டேனியல் ராஜ் என்பவரை 2018 ஆம் ஆண்டே போலீசார் கைது செய்தது. தற்போது பரிதி இளம்வழுதி மூன்றாவது மனைவி எலிசபெத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment