குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலி! தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேராட்சியில் கனகப்பட்டு குளத்தில் முருகேஷ், விஜய், விஜய் குமார் ஆகிய 3 மாணவர்கள் குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சொத்து குவிப்பு வழக்கு! மின்வாரிய பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை!!

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்ததனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அதோடு மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மக்களே கவனம்! 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

மேலும், 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.