பெரும் சோகம்! ராஜஸ்தானில் 3 மாணவர்கள் தற்கொலை..!!

தமிழகம் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்குஷ் ஆனந்த், அங்குஷ் ஆனந்த் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மாணவி பிரணவ் வர்மா ஆகிய 3 பேரும் ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற பகுதியில் தங்கி நீண்ட நாட்களாக JEE தேர்வுக்கு படித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளனர்.

அடுத்த 3 மணி நேரம்! 29 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை..!!

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிக மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் எச்சரித்தாக கூறப்படுகிறது.

இருப்பினும் மாணவர்கள் தற்கொலை குறித்த காரணங்கள் மற்றும் கடிதங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜஸ்தானில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக அனைத்து பயிற்சி மையங்களை மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்தும் தற்போது வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.