News
வாட்ஸ்அப்பில் 3 புதிய அம்சங்கள்: பயனாளிகள் மகிழ்ச்சி
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் மூன்று புதிய அம்சங்கள் விரைவில் வர உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயனாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் பதிவு செய்யும் மெசேஜ்கள் தானாகவே அழியும் வகையிலான வசதி, ஒரே ஒருமுறை மெஸேஜை பார்த்தவுடன் மெசேஜ்கள் அழியும் வசதி மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல தகவல் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி ஆகிய மூன்று அம்சங்கள் விரைவில் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
வாட்ஸ்அப்பில் ஏற்கனவே டிஸ்அப்பியரிங் என்ற வசதி ஒருசில நாடுகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த அம்சத்தின்படி நமக்கு வரும் மெஸேஜ்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு தானாகவே மறைந்து விடும். இந்த வசதி தற்போது அனைவருக்கும் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டாவதாக வியூ ஒன் என்ற வசதியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஒரு நபர் ஒரு முறை மெசேஜை பார்த்துவிட்டால் அந்த மெசேஜ் தானாகவே அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மூன்றாவதாக நீண்ட காலமாக வரிசையில் நிற்கும் மல்டி டிவைஸ் வசதி ஆகும். இந்த வசதி வெளியானால் பயனாளிகள் மிகப்பெரிய அளவில் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
