தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை !

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், சமீபத்தில் சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மே 4ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 5 ஆம் தேதி வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் குறைந்துள்ளது.

திங்கள்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் வானிலை நிலையத்தில் 33 டிகிரி செல்சியஸாகவும், மீனம்பாக்கத்தில் 33.3 டிகிரியாகவும் இருந்தது. இது, வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இயல்பை விட முறையே 3.1 டிகிரி மற்றும் 3.8 டிகிரி குறைவாக உள்ளது.

ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தென்னிந்தியாவில் வானிலை மாற்றம் மற்றும் மேற்குத் தொடர்ச்சியின் காரணமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.