3 மாசம் சம்பள பாக்கி. வட்டாரக் கல்வி அலுவலத்தினை சூறையாடிய ஆசிரியை!
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடியில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை வேலைபார்ப்பவர் தைலம்மை.
இவர் இதற்கு முன் பூம்பள்ளம் அரசுத் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்துள்ளார், அப்போது அவரின் இரண்டு மாத சம்பளத் தொகையானது செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.
தற்போது மணல்மேல் குடி அரசுப் பள்ளியில் வேலைபார்க்கும் நிலையில் அடிக்கடி அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
இதனால் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் சம்பளப் பட்டியலில் இருந்து தைலம்மையின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வராத நிலையில் வட்டாரக் கல்வி அலுவலகம் அடிக்கடி சென்று வந்துள்ளார் தைலம்மை.
ஆனால் அலுவலகத்தில் பொறுப்பான பதில் ஏதும் கிடைக்காத நிலையில் மனம் விரக்தி அடைந்த தைலம்மை தலைமை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கும் சென்றுள்ளார்.
அங்கும் சரவர பதில் கிடைக்காமையால் தைலம்மை கோபமாகி அலுவலகத்தில் இருந்து கணினி உள்பட பல பொருட்களை வீசியுள்ளார். மேலும் வீட்டில் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அங்கே பணிபுரியும் ஊழியர் வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தைலம்மையைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மேலும் போலீசாரும் இதுகுறித்து தைலம்மை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
