Connect with us

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம்! சிகிச்சையிலுள்ளவருக்கு ஒரு லட்சம் நிதியுதவி!!

fire accident in sivakasi

தமிழகம்

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம்! சிகிச்சையிலுள்ளவருக்கு ஒரு லட்சம் நிதியுதவி!!

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம்! சிகிச்சையிலுள்ளவருக்கு ஒரு லட்சம் நிதியுதவி!!

நம் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் பல்வேறு தொழிலை மையமாகக் கொண்டு காணப்படும். அவற்றில் தொழில் நகரமாக காணப்பட்டு உள்ளது விருதுநகர் மாவட்டம். ஏனென்றால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாக காணப்படும்.

சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு பட்டாசு உற்பத்தியை மையமாகக்கொண்டு காணப்படும். என்னதான் பட்டாசு ஆலைகள் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

பட்டாசு வெடி விபத்தில் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழும். இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் வெடி விபத்தில் இறந்த இரண்டு பேர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதி உதவியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த ஆறுமுகம், குபேந்திரன் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரனுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top