தொடரும் சோகம்!! விஷவாயு தாக்கி 4 பேர் பலி!!

கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது. இவரது வீட்டின் பின்பகுதியில் கழிவுநீர் தொட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொட்டியில் உள்ள கழிவுகளை அகற்ற சிவக்குமார் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது மயக்கமடைந்து கீழே விழுந்ததாக தெரிகிறது.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! எங்கெல்லாம் மழை?

இவர்களை காப்பாற்ற சென்ற ஒருவரும் அங்கே சென்று உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 3 பேரின் உடல் கிடைத்துள்ளதால் அவரது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சூழலில் தற்போது சின்னமலைப்பட்டியை சேர்ந்த 36 வயதான கோபால் என்பவரின் உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment