
Tamil Nadu
நெல்லை கல்குவாரி விபத்து; 3 பேர் உயிரிழப்பு !!
நெல்லை மாவட்டம் பாளையம் கோட்டை பகுதியில் பல ஆண்டுகளாக கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததால் 3 ஜேசிபி ஆப்ரேட்டர்கள் 2 லாரி டிரைவர்கள் ஆகியோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.
இதனிடையே 2 பேரை தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயத்தில் செல்வம் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இடிபாடுகளுடன் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கல்குவாரியில் உள்ள பாறைகள் மழைபெய்யும் காரணமாக சரிந்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.
மேலும் கல்குவாரியில் சிக்கியுள்ள 3 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 இறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
