
தமிழகம்
மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு: தமிழக முதல்வர் நிவாரணம்!!
விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூன்று குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பத்தில் சிக்கி 3 நபர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். அதோடு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
