Connect with us

8 மணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள்: நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

News

8 மணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள்: நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

adb904671c82b1f5c830f8ca96cc0fad

நியூசிலாந்து நாட்டில் கடந்த எட்டு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நியூசிலாந்து நாட்டில் நேற்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எனவே 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நியூசிலாந்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

cc968b88b506b2889c51a7b356f9fa71

வீடுகளில் இருந்து வெளியேறி பதட்டத்துடன் நிலப்பரப்பை நோக்கி ஓடிய காட்சியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆக்லாந்து மற்றும் பே ஆப் பிளண்டி ஆகிய பகுதிகளில் தான் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.

இந்த நிலையில் கடலோர பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கடலோர பகுதி மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தவும் நியூசிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் நிர்வாகங்கள் உடனடியாக பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் மீட்புப் பணிகள் தயாராக இருக்குமாறு நியூசிலாந்து அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சுனாமியை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக நியூஸிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top