காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகளின் நிலவரம்!

ஏரிகள்

சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் முழுவதும் நிரம்பி ஏரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஏரிகள்

அதன்படி இந்த மூன்று மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 1022 ஏரிகள் உள்ளன. இந்த 1022 ஏரிகளில் தற்போது 457 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 158 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 246 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100%  158 ஏரிகள் நிரப்பியுள்ளன.அதேபோல் 75%  கொள்ளளவு 96 ஏரிகள் நிரப்பியுள்ளன. 44 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிற:

செங்கல்பட்டு மாவட்டத்தில் 246 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 186 ஏரிகள் 75% விற்கு நிரம்பி உள்ளதாக காணப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீதம் 94 ஏரிகள் நிரம்பியுள்ளது.

இதனை போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 13 ஏரிகள் 75% நிரம்பியுள்ளது. மீதமுள்ள 24 ஏரிகள் 50% நிரம்பியுள்ளது.

மூன்று மாவட்டங்களில் 457 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. 302 ஏரிகள் 75% நிரம்பியுள்ளன. 174 ஏரிகள் 50% நிரம்பியுள்ளன. 88 ஏரிகள் 25% நிரம்பியுள்ளன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print