இந்தியாவில் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும். இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை கிடைக்கும்.
அதன்படி அக்டோபர் மாத இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.ஏரிகள் குளங்கள் அணைகள் என அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டியது.
சில நாட்களாகத்தான் இந்த கனமழையின் தாக்கம் தமிழகத்தில் சற்று குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அதன்படி வடகிழக்குப் பருவக்காற்றால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.