3 மாவட்டங்களில் உஷார்!! 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் படி, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், தலைநகரை பொருத்தவரையில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.