வாரத்தில் 3 நாள் விடுமுறை: மத்திய அரசு முடிவு

826f6c0ccad439c2936fe579d6e010f0

வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய சிஸ்டத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

இதுவரை வாரம் ஒருநாள் மட்டுமே தனியார் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் ஒரு சில நிறுவனங்களில் மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய விதியின் கீழ் தற்போது ஊழியர் ஒருவர் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்து வரும் நிலையில் இனி 9 மணி நேரம் முதல் 12 மணி நேரமாக வேலை நேரம் அதிகரிக்கப்படுகிறது. அவ்வாறு வேலை செய்தால் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

அதேபோல் உடல் நலம் பாதிப்பு பிரசவம் போன்ற காரணத்துக்காக இதுவரை 240 நாட்கள் மட்டுமே விடுமுறை என்ற நிலையில் தற்போது 300 நாட்கள் வரை விடுமுறை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஊதிய சட்டத்தின் அனைத்து ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் உறுதி செய்யப்படும் என்றும் புலம்பெயர் ஊழியர்களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படஉள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment