Connect with us

கனமழை எதிரொலி: 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

156689 school holiday

செய்திகள்

கனமழை எதிரொலி: 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளம்  அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

கடந்த சில நாட்களாகவே ஹைதராபாத் உட்பட தெலுங்கானா மாநிலத்தில் கனமழை வெளுத்து வருகிறது. இதனால் ஹைதராபாத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கோதாவரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளதால் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top