தங்கம் வென்ற வீராங்கனைக்கு 3 கோடி ரூபாய் பரிசு!!!

12b3877fed28fe702588669c15cdd774-1

தற்போது உலகமெங்கும் சிலர் வாரத்திற்கு முன்பு வரை மிகுந்த உற்சாகத்துடன் மும்மரமாக காணப்பட்டது, ஏனென்றால் இந்த ஆண்டுக்கான  ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் நடைபெற்றது. மேலும் அதில் ஏராளமான நாடுகள் பங்கேற்றன. நம் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பலரில் சிலர் பதக்கங்களை வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இந்திய நாடானது இந்த ஆண்டு முதல் 50 நாடுகள் பட்டியலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.398c431660f29ce2622f884ea81e8243

இந்த நிலையில் இந்தியா இந்த ஆண்டு ஒரு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை பெற்று  ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்தது.அதைத்தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற்றன. இதில் இந்தியாவின் சார்பில் பல மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  தற்போது அதில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு தொகை என அறிவித்தது ராஜஸ்தான் மாநில அரசு.

அதன்படி பாரா  ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை அவனிக்கு ராஜஸ்தான் அரசு 3 கோடி ரூபாய் பரிசினை அறிவித்தது. தங்கம்  மட்டுமில்லாமல் வெள்ளி வெண்கலம் வென்றவர்களுக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி வென்ற தேவேந்திர ஜாஜாரியாவுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசும் வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குஜ்ஜாருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

மேலும் துப்பாக்கி சுடுதலில் அவனி தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈட்டி எறிதலில்  ஜாஜாரியா மற்றும் சுந்தர்சிங் பதக்கம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment