ட்ரோன் மூலம் படப்பிடிப்பு: பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேர் கைது!!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான படம் பிச்சைக்காரம். இந்த படம் காட்ந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் கொடுத்தது. குறிப்பாக அம்மாவிற்காக பிச்சை எடுத்து தன் தாயின் உயிரை காப்பாற்றும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படம் விஜய் ஆண்டனி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அவரே இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் இப்படம் வெளியானதால் தற்போதும் 2 மொழிகளிலும் ரிலிஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வருவதால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனுமதி பெறாமல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில் போலீஸார் படக்குழுவினர் 3 பேரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.