காப்பகத்தில் 3 குழந்தைகள் பலி: குழந்தைகள் நல அலுவலர் சஸ்பெண்ட்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் அமைந்துள்ள திருமுருகன்பூண்டி காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே போல் 11 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவகாரன் தொடர்பாக அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் ஆகியோர் காப்பகத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

ரூ.1500 கடன்! திரும்ப தராததால் 2 கி.மீ தூரம் பைக்கில் இழுத்து சென்ற அவலம்..!!!

பின்னர் காப்பக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.

இதற்கிடையில் தற்போது உரிய விசாரணைக்கு பிறகு திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment