கெட்டுப்போன உணவால் 3 சிறுவர்கள் பலி!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

தனியார் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதன் காரணமாக 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உத்தரகாண்ட் பனிச்சரிவு: 26 பயிற்சி வீரர்கள் உடல்கள் மீட்பு!!

அதில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், அமைச்சர் மற்றும் அதிகாரில் காப்பகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இதற்கிடையில் தற்போது காப்பகத்தில் உணவு சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு: மனித உரிமை வழக்கறிஞக்கு அறிவிப்பு..!!

மேலும், மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வரும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment