விவசாயிகளே உங்க வீட்டுக்குப் போங்கள்! மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ்!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா, டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டம் 300 நாட்களையும் தாண்டி இருந்தது.

விவசாயிகள்

மத்திய அரசால் 3 வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அதனை ரத்து செய்யக்கோரி 12 மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் போராட்டத்தின் விளைவால் தற்போது 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்று உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி புதிய வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்கள் வீடுகள் திரும்ப பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மூன்று வேளாண்  சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்கள் தற்போது மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்தது விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் செய்யப்படுவதாக விவசாய சங்கங்கள் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment