3 வேளாண் சட்டங்கள்: தேர்தல் பயத்தால் தான் வாபஸ்! ஆணவ சக்தி அடிபணிந்தது!-காங்கிரஸ்;

இன்றைய தினம் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மிகப்பெரிய வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.ஏனென்றால் மத்திய அரசு  அறிவித்திருந்த 3 வேளாண் சட்டங்களையும் இன்று வாபஸ் பெற்றது.

விவசாயிகள்

இதுகுறித்து ஒவ்வொரு மாநில தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

அதன்படி இந்த சட்டங்கள் வாபஸ் பெற்றது தேர்தல் பயத்தால் என்று சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தல் அச்சம் காரணமாக மூன்று வேளாண் திட்டங்களை பிரதமர் மோடி வைக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

 ப.சிதம்பரம்

ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெறமுடியாத வெற்றி தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது என்று சிதம்பரம் கூறியுள்ளார். ஒன்றிய அரசு மனம் திருந்தி சட்டத்தை விலக்கிக் கொள்வதாக தெரியவில்லை என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆணவ சக்தி அடிபணிந்தது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment