பிரபல தனியார் மருத்துமனைக்கு 3.10 லட்சம் அபராதம்: பின்னணி என்ன?

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டம் அடுத்த தெருவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழாவில் பங்கேற்றார்.

இந்நிலையில் தீ மிதியில் இறங்கிய போது அவரிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தமிழகத்தில் அக்.14-ம் தேதி அமைச்சரவை கூட்டம்!!!

இதனிடையே மருத்துவர்கள் அங்கு இல்லாததால் உடனடியாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் விக்னேஷை அழைத்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட 34 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் பெற்றோர் மகனின் மரணம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டப்போது, இறப்பு சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை செய்யப்படும் என வழங்கப்படும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை… பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு..!!!

இந்த சூழலில் சில தினங்கள் கழித்து மருத்துமனையிடம் கேட்டபோது ஏற்கனவே காவல் நிலையத்தில் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது.

அப்போது பேசிய நீதிபதி பெற்றோர்களிடம் மருத்துவமனை உரிய பதில் அளிக்காத காரணத்தினால் தனியார் மருத்துவ மனைக்கு ரூ.3.10 லட்சம் அபராதம் பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இறப்பு சான்றிதல் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment