Connect with us

2-வது திருமணம் செய்த கணவர்!! ஆத்திரத்தில் செருப்பால் அடித்த மனைவி!!

husband

செய்திகள்

2-வது திருமணம் செய்த கணவர்!! ஆத்திரத்தில் செருப்பால் அடித்த மனைவி!!

தெலுங்கானாவில் 2-வது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஸ்வர்ணப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவர் 4 ஆண்டுகளுக்கு முன் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியை பிரிந்த ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அகிலா தனது கணவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளார்.

பின்னர் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top