சென்னையில் 2வது விமான நிலையம் அமைப்பது உறுதி : மத்திய அரசு தகவல் …

சென்னையில் இரண்டாவது விமான நிலையம்  நிச்சயமாக  அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தகவல் தெரிவித்து இருக்கிறார்.

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார்.

இதனிடையே சுமார் 3 விமானங்கள் சென்னையில் இருந்து போபாலுக்கும்,  போபாலில் இருந்து சென்னைக்கும்  காணோலி மூலம்  தொடங்கப்பட்டது.

இந்நிலையில் காணோலி மூலம் உரையாற்றிய போது சென்னையில் 2வது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படுவதாகவும் அதற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்ததாக கூறியுள்ளார்.

இதில் 2 இடங்களை தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment