ஓமலூரில் பரபரப்பு!! பப்ஸ் சாப்பிட்ட 29 குழந்தைகளுக்கு வாந்தி – மயக்கம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் பகுதியில் பப்ஸ் சாப்பிட்ட 29 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழிக்கு பழி! பிரியாணி கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்!!

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளி கேண்டினில் பப்ஸ் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது தீடீரென 29 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment