கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்வுக்கு 2,831 மாணவர்கள் லீவ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் வரவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் மொத்தம் 20,568 மாணவர்களில் 10,350 மாணவர்கள் மற்றும் 10,218 மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு உட்பட 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில வாரியத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற பொதுத் தேர்வுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை!

தேர்வுக்கு பின் தாள் திருத்தம் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கும் மற்றும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை 48,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.