நம் தமிழ்நாட்டில் தற்போதுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அவர்களுக்கு டெட் தேர்வு வைத்து தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில் 28984 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகைய தகவல் கிடைத்துள்ளது.
8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படாத நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்றவர் வழக்கு தொடுத்து இருந்தார். இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருப்பதாகவும், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதை எதிர்த்து ரவி வழக்கு தொடுத்து இருந்தார். இவரைப் போன்ற தமிழகத்தில் பலரும் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.