ஒரே நாளில் 28 லட்ச பார்வையாளர்களா…. வேற லெவல் என பாராட்டப்படும் மாணவி!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்று வரும் கலை பண்பாட்டு திருவிழா அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் புதுகோட்டையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த மாணவி பாடல் பாடியும் நடனமாடியும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

புதுகோட்டை மாவட்டம் வயலோகம் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி கலை பண்பாட்டு திருவிழாவில் கலந்து கொண்டு சினிமா பாடல்களை சிறப்பாக பாடியும் , டிரெண்டாகி வரும் சினிமா பாடல்களுக்கு கலக்கலாக நடனமாடியும் மற்றவர்களை மகிழ்வித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவி பாடல் பாடுவதையும் நடனமாடுவதையும் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போழுது சமூக வலை தளங்களில் 28 லட்ச பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் தற்போழுது நடைபெற்று வரும் கலை பண்பாட்டு திருவிழாவில் முதல் 2 சுற்றுகளை முடித்துள்ள மாணவி அடுத்ததாக மூன்றாவது சுற்றிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு மாணவ மாணவிகளின் திறமையை வெளிக்காட்ட இது போல கலை பண்பாட்டு திருவிழாவை ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி தனது திறமையை வெளிகாட்ட கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக ஆர்த்தி கூறியுள்ளார்.

அடுத்த 3 மணி நேரம்! 29 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை..!!

மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சாதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்த உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...