
News
90 வயது மூதாட்டி உட்பட 27,000 கவுன்சிலர்கள் பதவியேற்பு!!
90 வயது மூதாட்டி உட்பட 27,000 கவுன்சிலர்கள் பதவியேற்பு!!
தமிழகத்தில் சில தினங்கள் முன்பாக ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றதாக காணப்பட்டது. இதனால் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கின்றனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 27000 பேர் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
அதிலும் குறிப்பாக 90 வயது மூதாட்டியின் இன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி நெல்லை மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவராக தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனால் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழ்மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர,சகோதரிகளுக்கும் நன்றி என்றும் மோடி பேசி கூறியுள்ளார். அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைப்போம் என்றும் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
