Connect with us

திருநங்கைகளுக்கு 27% இடஒதுக்கீடு: மத்திய அரசு அதிரடி முடிவு!

News

திருநங்கைகளுக்கு 27% இடஒதுக்கீடு: மத்திய அரசு அதிரடி முடிவு!

4af4c7b7df949e761a25f81167050221

திருநங்கைகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க மத்திய அரசு திடீரென முடிவு எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருநங்கைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்கும் வரைவு அறிக்கையை சமூக நீதித்துறை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா ஜனாதிபதியின் கையெழுத்துக்காக அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. 

ஜனாதிபதி இந்த மசோதாவுக்கு கையெழுத்து போட்டதும் இந்த மசோதா அமலுக்கு வரும் என்றும் அதன் பின்னர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் சமீபத்தில் அளிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top