Connect with us

ஒரே ஆட்டோவில் பயணித்த 27 பேர்: அதிரடி காட்டிய போலீஸ்!

kg

செய்திகள்

ஒரே ஆட்டோவில் பயணித்த 27 பேர்: அதிரடி காட்டிய போலீஸ்!

உத்தரபிரதேசத்தில் ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் நேற்றைய தினத்தில் கோலாகலமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதோடு பக்ரீத் பண்டிகை கொண்டாடும் விதமாக உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்றைய தினத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் பதேபூர் அருகே பிந்தி கோட்வாலி என்னுமிடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஆட்டோ ஒன்று அதிவேகமாக வாகன சோதனை இடத்தில் நிற்காமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோவை துரத்தி சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதனிடையே ஆட்டோவில் இருந்து இறங்க கூறிய போது, சிறுவர்கள், பெரியவர்கள் என 27 பேர் பயணித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்பட்டது.

மேலும், இதையடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top