கோர விபத்து! தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் படுகாயம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரக்கோயில் கிராமத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து செஞ்சிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்தவாசியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுனர் மணிகண்டன் என்பவர் பேருந்தை இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து திடீரென கவிழ்ந்து விழுந்தது.

மக்களே உஷார்!! வருகின்ற 8-ம் தேதி மிக கனமழை பெய்யும்.. வானிலை அப்டேட்!!

இந்த விபத்தில் 27-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசூர் காவல்நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது பிரியர்களே உஷார்!! மதுபானத்தில் செத்து மிதந்த ஈ..!!!

மேலும், வந்தவாசியில் சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.