இன்று எத்தனை மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள், விடுமுறை: முழு தகவல்கள்!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் 27 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை ஒன்றும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி சென்னை, திருவள்ளூர். பெரம்பலூர், மதுரை, அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment