Tamil Nadu
27 மாவட்ட சேர்மன் பதவிகளில் திமுக, அதிமுகவுக்கு எத்தனை?

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் 27 மாவட்ட சேர்மன் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்றுள்ளன. திமுக 13 இடங்களிலும் அதிமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் இரண்டு தொகுதிகளுக்கான முடிவுகள் வரவேண்டிய நிலை உள்ளது
திமுக வெற்றி பெற்ற மாவட்ட சேர்மன் பதவிக்கான தொகுதிகள்: மதுரை, திருச்சி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை
அதிமுக வெற்றி பெற்ற மாவட்ட சேர்மன் பதவிக்கான தொகுதிகள்: சேலம், அரியலூர், கோவை, நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, தர்மபுரி, கரூர் மற்றும் கன்னியாகுமரி
கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்ட சேர்மன் பதவிகளுக்கான முடிவு இன்னும் சில மணி நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
