Connect with us

17 வயது பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த 26 வயது ஆசிரியை: அடுத்து நடந்த தரமான சம்பவம்…

HUSBAND WIFE MARRIED LIFE024756

Tamil Nadu

17 வயது பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த 26 வயது ஆசிரியை: அடுத்து நடந்த தரமான சம்பவம்…

17 வயது பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த 26 வயது ஆசிரியை: அடுத்து நடந்த தரமான சம்பவம்…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தனியார் பள்ளியில் 11வது படிக்கும் மாணவரை ஏமாற்றி திருமணம் செய்த 26 வயது வயது பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தனியார் பள்ளியில் 11வது படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பெற்றோர்கள் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட வீசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சிக்கத்தம்பூரை சேர்ந்த சர்மிளா(26) என்பவருடன் அந்த மாணவர் சென்று இருப்பது தெரியவந்தது.

ஆசிரியர் சர்மிளா செல்போனை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்ததில் இருவரும் திருவாரூர், தஞ்சை, திருச்சி போன்ற பல இடங்கள் சுற்றியது தெரியவந்தது.

இறுதியில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். தோழி வீட்டில் தங்கிய ஆசிரியை மற்றும் மாணவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆசிரியை சர்மிளாவை போச்சோ சட்டத்தில் கைது செய்த முசிறி அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top