26ம் தேதி வெளியாகும் விக்ரமின் மகான் திரைப்படம்

தமிழில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டாவும் நன்றாக போனதால் அவருக்கு பெரிய பெரிய படங்களை இயக்கும் வாய்ப்பும் வந்து சென்றது.

ரஜினியின் பேட்ட படத்தை அந்த வகையில் இயக்கினார். தனுஷை வைத்து இயக்கிய ஜகமே தந்திரம் தோல்வியில் முடிந்ததால் தற்போது விக்ரமை வைத்து மகான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் மட்டுமல்லாது அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். துருவ் விக்ரம் நடித்த முதல் படமே பாலா இயக்கத்தில் நடித்து அதே கதையில் பின்பு வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் நடித்து குழப்பமானது.

மகன் துருவ் விக்ரமுக்கு ஒரு பலத்த அறிமுகம் வேண்டும் என்பதால் இந்த படத்தில் விக்ரம் சேர்ந்து நடித்துள்ளார். இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது.

இப்படம் ஓடிடி தளமான அமேசானில் வெளியாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment