News
சென்னையில் கொரோனாவுக்கு ஒரே இரவில் 26 பேர் மரணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும் அதேபோல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னை மற்றும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தினமும் சராசரியாக 60க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் 26 பேர் மரணம் அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழப்பு எனவும், அரசு ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா 6 பேர் மரணம் எனவும், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது
