
தமிழகம்
ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும் , குளிக்கவும் 25-வது நாளாக தடை!!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 25-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி, வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
குறிப்பாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 68 ஆயிரம் கன அடியாகவும், கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி என இரண்டு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 83 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது.
அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பகுதியானது முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பரிசல் இயக்கவிம், அருவியில் குளிக்கவும் 25-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரையில் இத்தகைய அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
